புதிய நடிகர் சங்க கட்டிடம்... விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை!!!

புதிய நடிகர் சங்க கட்டிடம்... விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை!!!

புதிதாக உருவாகிவரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு, கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஷால், நடிகர் சங்க புதிய கட்டிடத்தில், விஜயகாந்திற்கு பாராட்டுவிழா எடுப்போம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் புதிதாக உருவாகிவரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு, கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  அதற்கு விளக்கமும் அளித்துள்ளார் மீசை ராஜேந்திரன்.   

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர் எனவும் பல இயக்குனர்களை உருவாக்கியவர் எனவும் கூறியுள்ளார்.  மேலும் நடிகர் சங்க கடனை அடைத்தவர் எனவும் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர் எனவும் கூறிய ராஜேந்திரன் ஆகவே, பாராட்டு விழாவோடு, நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க:   அதிமுக பொதுச்செயலாளர் யார்?....இன்று அதிமுக கூட்டம்!!!