பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்...தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்...தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பயணிகளிடம் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, மக்கள் தங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : இனி கிராம ஊராட்சிகளில் எல்லாம் ஆன்லைனில் மட்டுமே...இன்று முதல் அமல்!

2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை, அரசு பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.