எஸ்பி மணிவண்ணன் மீது விசாரணை கைதி பகீர் குற்றச்சாட்டு....!!

எஸ்பி மணிவண்ணன் மீது விசாரணை கைதி பகீர் குற்றச்சாட்டு....!!

ஜாமின் கிடைக்காத விரக்தியிலும்  சிறையில் காவலர்கள் தன்னை அதிகமாக துன்புறுத்துவதாகவும் கூறி  தற்கொலைக்கு முயன்ற தங்கபாண்டி.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பூசாரி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இந்த  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக  போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது  தங்கபாண்டி என்ற விசாரணை கைதி நீதிமன்ற வளாகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கீழே கிடந்த பேனா மை பாட்டிலை உடைத்து கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி தங்கபாண்டியை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற தங்கபாண்டி தனக்கு ஜாமின் கிடைக்காத விரக்தியிலும்  சிறையில் காவலர்கள் தன்னை அதிகமாக துன்புறுத்துவதாகவும் கூறி தற்கொலைக்கு முயன்றது முதல் கட்ட தகவலில் தெரியவந்தது.  தொடர்ந்து இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தகவலில் எஸ்பி மணிவண்ணன் குறிப்பிட்ட சமுக்கத்திற்காக ஆதரவாக செயல்படுபவதாகவும் தான் அந்த சமூகத்தை சாராததால் தன்னை துன்புறுத்துவதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கைதி அவரது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:  விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.....!!!