"பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் போட்டி போட்டு அரசியல் பேசுகிறார்கள்" சாமிநாதன்!!

"பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் போட்டி போட்டு அரசியல் பேசுகிறார்கள்" சாமிநாதன்!!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் போட்டிப்போட்டு அரசியல் பேசி வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

திருப்பூரில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று உரையாற்றிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், நடுநிலையாக செயல்பட வேண்டிய ஆளுநர்கள் அரசியல் பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளார். 

மேலும், சனாதனம் குறித்து ஆ. ராசா பேசியதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தது, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் போட்டிபோட்டு அரசியல் பேசி வருவதைக் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிக்க || "நீட்டுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவின் உண்மையான அஞ்சலி செலுத்தும், நாள்" முதலமைச்சர்!!