தூய்மை பணியாளர்கள் நலன் ஆய்வுக்கூட்டம்: பிரச்சனைகளுக்கு நடவடிக்கை - தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர்

தூய்மை பணியாளர்கள் நலன் ஆய்வுக்கூட்டம்: பிரச்சனைகளுக்கு நடவடிக்கை - தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர்

தூய்மை பணியாளர்கள் நலன்களுக்காக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கையுறையில்லாமல் கழிவுகளை அகற்ற சொல்வது, பாலியல் சீண்டல், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்த தூய்மை பணியாளர்கள் -  மாநகராட்சி ஆணையரிடம் பேசி உரிய நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி உள்ளதாக தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில், தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் தலைமையில்,  ,தூய்மைப் பணியாளர் நலனுக்கான  நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆணையர் வதந்திப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பலர் பங்கு பெற்றிருந்தனர்.ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் மா. வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர்:

மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ளேன் அதில் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தூய்மைப் பணியாளர்கள் முன் வைத்தனர் அதில் பிரதானமாக  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

அது மட்டுமின்றி தாங்கள் செய்யும் பணியினை ஒருசிலர் மதிப்பதில்லை , பெரிய கட்சியில் இருப்பவர்கள் ஒரு சிலர் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் போது தங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை போன்ற குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க |கிரிக்கெட் பிரியர்களுக்கு: 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் ஒளிப்பரப்படும் - மெட்ரோ நிர்வாகம்

அதோடு வருங்கால வைப்பு நிதி , இ எஸ் ஐ உள்ளிட்டவை முறையாக பிடிக்க வேண்டும் போன்ற உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இது தொடர்பாக தேவையான நடவடிக்கையில் எடுக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் ஆணையத்தின் சார்பாக அறிவுறுத்தியுள்ளேன்

இன்றைய கூட்டத்தில் முன்னாள்  தூய்மை பணியாளர் ஒருவர் பாலில் ரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையரிடம் தெரிவித்திருக்கிறேன்.

காண்ட்ராக்ட் வேலையினால் சம்பளம் குறைவாக கிடைக்கிறது மன உளைச்சலுக்கு ஆலோகிறோம் நினைத்த நேரத்தில் வேலையை விட்டு எடுத்து விடுகிறார்கள் அதனால் காண்ட்ராக்ட் மூலம் பணியமர்த்தல் வேண்டாம் என்று பணியாளர்கள் பலர் கூறியுள்ளனர் இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளோம்.


கடந்த 23ம் தேதி தூத்துக்குடியில் சுடலை மாடன் என்ற தூய்மை பணியாளர் ஒருவர் விஷம் அருந்தி இறந்துவிட்டார்.

மேஸ்திரி வேலையை நிரந்தரப்படுத்த லஞ்சம் கேட்டு தர முடியாது என்று கூறியதால், ஜாதி ரீதியாக திட்டியதால் மன உளைச்சலின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தற்போது திமுகவில் உள்ளார். அவருடைய மருமகன் தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இன்று வரையில் அவர்களை காவல் துறையினர் கைது செய்யவில்லை. அவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ காவல்துறையினர் இதுவரையில் கைது செய்யாமல் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன்

நல்ல ஊதியத்தில் பணி

கர்நாடகா போன்ற மாநிலங்களில் DPS ( direct payment system) என்ற திட்டம் உள்ளது இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிரந்தரம் பணியாளர்களாகவும் அல்லாமல் அவுட்சோசிங் முறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் இல்லாமல் நல்ல ஊதியத்தில் பணி செய்து வருகிறார்கள். அதுபோன்ற நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.  தூய்மை பணியாளர்களை வைத்து அமைப்பை உருவாக்குவதன் மூலம் அவர்களை அதில் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் இருந்து பணியாற்ற முடியும் என்ற கூறினார்