"காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது" சீமான் குற்றச்சாட்டு!

"காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது" சீமான் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான் அரசு பள்ளி, கல்லூரிகளின் தரம் உயரவில்லை. காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது என கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கல்வி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய சீமான், என்னை ஆட்சியில் அமர வைத்தால் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளி, கல்லூரிகளிலேயே படிக்க வைப்பேன். அமைச்சர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்க சொல்வேன். இல்லையென்றால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என தெரிவித்தார்.   

திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான், தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளின் தரம் உயரவில்லை என தெரிவித்த சீமான், காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது என சாடினார். 

மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவருக்கே மீண்டும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பேன் என்று மேடையிலேயே வேட்பாளரையும் அறிவித்தார். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com