"எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது" சீமான் உறுதி!

எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி  கிடையவே கிடையாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெண்களுக்கு 33% இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. பாஜக முதலில் தங்களது கட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குமா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "திமுக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து வாங்கி என்ன செய்ய போகிறது. அந்த கையெழுத்து வாங்கி யாரிடம் அவர்கள் வழங்க போகிறார்கள். தற்பொது நடைபெறுவது மக்களுக்கான அரசியல் அல்ல தேர்தலுக்கான அரசியல் மட்டுமே தற்பொது நடைபெற்று  வருகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "மத்திய, மாநில அரசு இரண்டுமே மக்களுக்கான அரசு இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறிக்கொண்டு பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை. சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் எடுக்க வேண்டும். முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.