
இந்து மதம் என்பது வாழைப்பழம் என்றும், சனாதனம் என்பது வாழைப்பழ தோல் போன்றது என்றும் அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளித்தேரை அமைச்சர்கள் ஆர். காந்தி, சேகர் பாபு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய சேகர்பாபு, இந்துமதம் என்பது வாழைப்பழம் என்பதும், சனாதனம் என்பது வாழைப்பழத் தோல் என்றும் கூறினார். மேலும் தோலை நீக்கிவிட்டு தான் பழத்தை உண்பார்கள் எனவும் சனாதானத்தின் தேவையில்லாத பகுதியை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!!