''ஒரு கிலோ தங்கம் கொடுத்தால் கூட திமுக-வை மக்கள் நம்ப மாட்டார்கள்'' செல்லூர் ராஜு விமர்சனம்!!

''ஒரு கிலோ தங்கம் கொடுத்தால் கூட திமுக-வை மக்கள் நம்ப மாட்டார்கள்'' செல்லூர் ராஜு விமர்சனம்!!
Published on: 
Updated on: 
1 min read

ஒரு கிலோ தங்கத்தை வீடு வீடாக கொடுப்பதாக  திமுக சொன்னாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அதிமுக மாநாட்டிற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால், திமுக விதிமுறைகளை தளர்த்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும் திமுக கொடுத்தால் மட்டுமல்ல ஒரு கிலோ தங்கத்தை வீட்டுக்கு வீடு கொடுப்பதாக திமுக சொன்னாலும் மக்கள் அதை வாங்கவும், திமுகவுக்கு வாக்களிகவும் தயாராக இல்லை என விமர்சித்துள்ளார்.

மேலும், சாதிக்கலவரம், மதக்கலவரம் நடப்பதால் திமுக ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் எனவும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என கொடுமைக்கு மேல் கொடுமை நடைபெறுகிறது எனவும் குற்றம் சாற்றியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com