வனத்துறை மீது குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி..!!!

வனத்துறை மீது குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி..!!!

மின்சாரத்துறை திட்டங்களை செயல்படுத்த  வனத்துறையிடம் அனுமதி பெற கடினமாக உள்ளதாகவும் இதனால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த காலதாமதம் ஆவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வனத்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டபேரவையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் காத்தாரிகுப்பம் பகுதியில் 110 மின்திறன் கொண்ட  துணை மின் நிலையம் அமைக்கபட்டுள்ளது எனவும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த பகுதியை முதன்மை சாலையிலிருந்து சென்றடையலாம் எனவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.  மேலும்  அவர் வனத்துறை அனுமதி வழங்காததால்  5 கிலோ மீட்டர் சுற்றிகொண்டு அரசு ஊழியர்கள் செல்வதால் அரசிற்கு நட்டம் ஏற்படுமென இதற்க்கு மின்சாரத்துறை என்ன செய்ய போகிறது எனவும் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வனத்துறை வழியாக மின்சார கம்பங்கள், மின்சார கடத்தி கம்பிகளை  வனத்துறை வழியாக கொண்டு செல்ல வனத்துறை அனுமதி பெற வேண்டியுள்ளது எனவும் ஆனால் வனத்துறை அனுமதி பெற கடினமாக உள்ளது எனவும் தெரிவித்த செந்தில் பாலாஜி இதனால் திட்டங்களை செயல்படுத்த காலதாமதம் ஆவதாக வனத்துறை மீது குற்றஞ்சாட்டினார்.  மேலும் மின்சாரத்துறை வனத்துறையிடம் அனுமதி பெற்று விரைந்து செயல்படுத்தும் எனவும் அமைச்சர் உறுதியாக கூறினார்.

இதையும் படிக்க:  நிதி கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை..... பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரஜன்!!!