செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரும் விவகாரம்; "2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியும்" உயர் நீதிமன்றம் தகவல்!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரும் விவகாரம்; "2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியும்" உயர் நீதிமன்றம் தகவல்!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பான வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கவனித்து வந்த இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டன. இது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல். ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்படால் மட்டுமே பதவி இழப்பு செய்ய முடியும் என்று கூறினர். மேலும், அமைச்சராக நீடிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்புய கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். 

இதையும் படிக்க:ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் வழங்கிய கமலஹாசன்!