முன்னாடிலாம் கம்பிய தொட்டாதான் ஷாக் அடிக்கும்,.. இப்போலாம் கரண்ட் பில்ல பார்த்தாலே ஷாக் அடிக்குது ...!

முன்னாடிலாம் கம்பிய தொட்டாதான் ஷாக் அடிக்கும்,..  இப்போலாம் கரண்ட்  பில்ல பார்த்தாலே ஷாக் அடிக்குது ...!

தஞ்சாவூர் அருகே  குருவிக்கரம்பை கிராமத்தில் மின்சாரம் கட்டணம்  15,000  ரூபாய் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துமாறு ரசீது வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுவரை  இலவச மின்சாரம் பெற்று வந்த வீடுகளுக்கு 1500 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. இதே போல் கடந்த காலங்களில் 400 -  500 கட்டியவர்களுக்கு தற்போது 4000 முதல் 5000 வரை மின் கட்டணம் வந்துள்ளது. 

மேலும் ஒரு குடிசை வீட்டிற்கு 15 ஆயிரம் கட்ட சொல்லி கட்டணம் வந்துள்ளது.இதே போல் நான்காயிரம் - ஐந்தாயிரம் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வந்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதிகளில் கடந்த காலங்களில் முறையான மின் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என கூறுகின்றனர். அதிகாரிகளும் கேட்டால் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனவும் மின்கட்டணத்தை கட்டாயம் கட்டியாக வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். 

மேலும் இவ்வளவு தொகை தங்களால் கட்ட முடியாது என்ன கூறுகையில், கட்டப்பஞ்சாயத்து பேசுவது போல் பாதி தொகையை  கட்டுங்கள் என அவர்கள் கூறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க    |   மதுபான ஆலை; வங்கிக் கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவு; தற்காலிக நிறுத்தம்!