தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட சித்தர் தின விழா...!!

தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட சித்தர் தின விழா...!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவ மனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா கொண்டாடப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மூலிகை கண்காட்சி சித்த மருத்துவ மூலப்பொருட்கள் கண்காட்சி சித்த மருத்துவர் அறுவை சிகிச்சை கருவிகள் கண்காட்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கான பாரம்பரிய சமையல் போட்டி நெகிழி இல்லா கடற்கரை திட்டக்குழு கண்காட்சி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு கண்காட்சியினை கண்டு பயன் பெற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com