தமிழகத்தின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் கைகோர்க்கும் சிங்கப்பூர்...!!!

தமிழகத்தின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் கைகோர்க்கும் சிங்கப்பூர்...!!!

அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேசியுள்ளார்.  புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். 

நீண்டகால உறவு:

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களது உரையாடலின் முக்கிய சாராம்சங்களை தெரிவித்துள்ளார். அதாவது, சிங்கப்பூரின் முக்கிய நிதி மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் உற்பத்தி ஈடுபாடு இருந்தது எனவும் டெமாசெக்கின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தில்ஹான் பிள்ளை சாண்ட்ரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் கிம் யின் வோங் மற்றும் கேபிட்டலேண்டின் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான பேச்சுக்கள் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான நீண்டகால உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது எனக் கூறினார்.

டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:

மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் எங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர் எனவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்துறை பூங்காக்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள முதலீடுகளை உணவு பதப்படுத்துதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே வரலாற்று மற்றும் பரஸ்பர கூட்டமைப்பை மேலும் கட்டியெழுப்பவும் தொடரவும் எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிக்க:  பிரதமர் மோடியை சுற்றி வளைத்த எதிர்க்கட்சிகள்... கைகோர்த்ததா திமுக...!!