பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்!!

பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம்!!

Published on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை விமர்சித்து சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "விலைவாசி உயர்வு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்; அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை; மணிப்பூரில் சமூகநீதி கேள்விக்கு உள்ளானது, ஹரியானாவின் மதக்கலவரம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும்; சீன ஆக்கிரமிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசரத் தேவை, மத்திய-மாநில உறவின் விரிசல்கள் ஆகியன தெளிவுபடுத்தப்பட வேண்டும்; வெள்ளத்தில் மூழ்கிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்; 9 விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" போன்றவற்றை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com