விரைவில் மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம்...பாஜக தலைவர்!!

விரைவில் மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம்...பாஜக தலைவர்!!

Published on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும் மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் ஷிகோன் தொகுதியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றிபெற்ற போதும், பாஜக படுதோல்வியை  சந்தித்திருக்கிறது. இது குறித்து  பேசிய பசவராஜ் பொம்மை, கர்நாடக மக்கள் கொடுத்த தீர்ப்பை  தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்தார். 

வெற்றி தோல்வி என்பது பாஜகவுக்கு புதிதல்ல எனவும் விரைவில் மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம் எனவும் அவர் கூறினார். பாஜக தோல்வி அடைந்த நிலையில் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜனாமா செய்ய முடிவு செய்துள்ளார். நாளை ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.    

தேர்தல் முடிவு குறித்து  பேசிய பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடக மக்கள் முடிவை மனப்பூர்வமாக புரிந்து கொள்வதாக கூறினார். தேர்தல் முடிவால் பாஜக தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என குறிப்பிட்ட அவர், கட்சியின் பின்னடைவுக்கான காரணம் குறித்து சுயபரிசோதனை செய்யவுள்ளதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com