CSK கோப்பைக்கு தி.நகரில் சிறப்பு பூஜை!!!

CSK கோப்பைக்கு தி.நகரில் சிறப்பு பூஜை!!!

ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரில், சி.எஸ்.கே வென்றெடுத்த  கோப்பைக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


16வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

IPL 2023 Final: CSK Won Match By Five Wickets Against GT In Match 74 5th  Time Champion Narendra Modi Stadium

இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அணி நிர்வாகிகள் வெற்றி கோப்பையோடு இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களோடு ஐபிஎல் வெற்றி கோப்பையில் எடுத்து வரப்பட்டது.

சென்னை தி.நகர் திருப்பதி தெரியுமா? விரைவில் கும்பாபிஷேகம் | Indian Express  Tamil

இந்த நிலையில் சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான என். சீனிவாசன், சிஇஒ காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு  கோவிலுக்கு வெளியில் கொண்டுவரப்பட்டு அங்கு கூடியிருந்த பொது மக்கள் முன்பு கோப்பையை காண்பித்து மக்களை உற்சாகப்படுத்தினார்.