நிபா வைரஸ் பரவல்... கட்டாய முகக் கவசம் அணிய உத்தரவு!!

Published on: 
Updated on: 
1 min read

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் அதிகம் பாதித்த கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ள மாஹேவிற்கும் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இதனால் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்குள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் சுவாச பிரச்சினை அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com