
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடம், சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று. 14 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் நேற்று மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
எல்ஐ.சி. என மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பெயர் பலகையில் பற்றிய தீயால், அண்ணா சாலையில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை, 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக போராடி அணைத்ததாக தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜய் சேகர் கூறினார். கட்டிடத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஓபிஎஸ் வழக்கு... இன்று தீர்ப்பு வழங்கப்படுமா?!!