8 இடங்களில் சதம் அடித்த வெயில் !!!!

8 இடங்களில் சதம் அடித்த வெயில் !!!!
Published on
Updated on
1 min read

"தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதி"

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக மதிய வேலைகளில் வெயிலின் காரணத்தினால் புழுக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைக்காமல் இருந்த நிலையில் நேற்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரின் ஹிட்டை வெயில் தொட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 17 இடங்களில் சதம் அடித்த நிலையில் தற்போது நீண்ட நாட்கள் கழித்து 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது..

ஈரோடு 102.20°F,  கரூர் பரமத்தி 102.20°F, மதுரை நகரம் 101.12°F, மதுரை விமான நிலையம் 101.48°F, நாகப்பட்டினம் 100.04°F, திருச்சி 100.94°F, திருத்தணி 100.40°F, தொண்டி 100.22°F வெயில் பதிவாகியுள்ளது.


.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com