ஹீரோவாக கலக்கப்போகும்  சூரி..! ரசிகா்கள் எதிா்பாா்க்கும் விடுதலை!!

ஹீரோவாக கலக்கப்போகும்  சூரி..! ரசிகா்கள் எதிா்பாா்க்கும் விடுதலை!!

வெற்றிமாறனின் இயக்கத்தில் இந்த மாதம் 31-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் விடுதலை படத்திற்கு  ரசிகா்கள் மத்தியில் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.  அசுரன் படத்திற்கு பிறகு  வெற்றிமாறனின் இயக்கத்தில் படம் எதுவும் வெளியாகத நிலையில்  ரசிகா்கள் மத்தியில் விடுதலை படத்திற்கு  பெரும் எதிா்பாா்ப்பு  காணப்பபடுகிறது.

வெற்றிமாறனின் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், சூரி ஹீரோவாகவும்  நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  அதேபோல், கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக  வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.   விடுதலை படத்தின் ப்ரீமியா்  ஷோவை பாா்த்த சில பிரபலங்கள் சூரியின் சினிமா வாழ்க்கையில் இப்படம் பெரும் பங்குவகிக்கும் எனவும் அவா் குமரேசன் என்னும் பெயரில் நிஜ போலீசாகவே வாழ்ந்தாகவும்  பாராட்டி வருகின்றனா்.  அதேபோல் இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு கூடுதல்  பலமாக அமைந்திருப்பதாகவும் தொிவித்துள்ளனர்.

விடுதலை படம் முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், மொத்த டீமும் முழுமையாக  ஈடுபட்டு கடுமையாக  உழைத்ததாகவும் படப்பிடிப்புக் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும்  இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் எனவும், க்ளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சி மிக சிற்ப்பாக  படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறனின் இயக்கத்தில் வரும் வடுதலைப்படத்தின் முதல் பாகத்திற்கு தமிழ் சினிமா ரசிகா்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-முருகானந்தம்

இதையும் படிக்க:   விரைவில் வீடு திரும்புகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!