கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுவிக்கி ஊழியர்கள்....!!

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுவிக்கி ஊழியர்கள்....!!
Published on
Updated on
1 min read

சுவிக்கி ஊழியர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுவிக்கி நிறுவன ஊழியர்கள் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றி தர வேண்டும் எனவும் ஆட்டோ காத்திருப்புகளுக்கு கட்டணம் வழங்க வேண்டும் எனவும் கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஊழியர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com