தாம்பரம் ஆட்டோ ஓட்டுனர் கொலை... தொடரும் விசாரணை!!

தாம்பரம் ஆட்டோ ஓட்டுனர் கொலை... தொடரும் விசாரணை!!
Published on
Updated on
1 min read

சென்னை அடுத்த தாம்பரம் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்பகை காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் குமார் என்பவரின் மகன் பாலாஜி.  ஆட்டோ ஓட்டுனரான  பல்லு என்கிற பாலாஜி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாகத்தியால்  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்,

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி இன்று அதிகாலை உயிரிழந்தார்.  உடலை கைப்பற்றிய பீர்கன்காரனை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அவர்கள் நடத்திய விசாரனையில் பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் மேலும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் முன் பகை காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  தர்ம அடி வாங்கிய போதை ஆசாமி... நடந்தது என்ன?!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com