தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?!!

தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 

பொது பட்ஜெட்:

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அவை தொடங்கியதும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

திட்டங்கள்:

இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்  உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆய்வுக் குழு:

பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.  அப்போது, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

வேளாண் பட்ஜெட்:

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தெரியவரும்.  இதனைத் தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிட்டதக்கது.  

எதிர்க்கட்சிகள்:

இந்த கூட்டத்தொடரில் ஈபிஸ் மீதான பொய் வழக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதையும் படிக்க:   அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.....எச் ராஜா பேட்டி!!!