இனி தனியார் பள்ளிகளில் 'தமிழ் பாடம் கட்டாயம்'...தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்!

இனி தனியார் பள்ளிகளில்  'தமிழ் பாடம் கட்டாயம்'...தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 'தமிழ் பாடம் கட்டாயம்' என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த 2015 - 16-ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த சட்டம் படிப்படியாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தொடங்க உள்ள 2023 - 24ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 - 25ம் ஆண்டில், 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயமாகிறது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும், 2024 - 25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : போதை ஆசாமிகளே, பாத்து பேசுங்க..! இனிமே ஓடவும் முடியாது....! ஒளியவும் முடியாது....!

மேலும், மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை தனியார் பள்ளி நிர்வாகம் நியமிக்க வேண்டும் எனவும், 2024 – 25ஆம் கல்வி ஆண்டுக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடத் திட்டம் மற்றும் அதற்கான தேர்வு முறையை தனியார் பள்ளிகளின் இயக்குநர் நிர்ணயம் செய்வார் என்றும், 9 மற்றும் 10.ஆம் வகுப்புகளில் தமிழ் கூடுதல் மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.