தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்!!

தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்!!

Published on

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் முழு உருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, பொன்முடி ஆகியோரும் தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.  தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தீரன் சின்னமலையின் சிலைக்கு ஆருயிர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தியபடி திரளாக கூடியிருந்தனர்.  மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாரிகாடுகள் அமைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com