திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்- காரணம் இதோ!!!

திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்- காரணம் இதோ!!!
Published on
Updated on
1 min read

நகர்மன்ற உறுப்பினர்களுக்கு  பதில் அளிக்காமல் அலட்சியம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உள்ளது இந்த நகராட்சி  தலைவராக திமுகவை  சேர்ந்த வெண்ணிலா என்பவர் உள்ளார் நிலையில் திட்டக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஓர் ஆண்டு ஆகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினாலும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு  பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து 9 திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் இரண்டு அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 11  நகர்மன்ற உறுப்பினர்கள் மர்மமாக உள்ள நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி தலைவர் வெண்ணிலா நகர் மன்ற ஆணையர் ஆகியோரிடம் நகராட்சி அலுவலகத்தில் இன்று கேள்வி எழுப்பினர்.

கையெழுத்து பெறாமல் தீர்மானங்களை நிறைவேற்றம்

மேலும் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற 6 நகர்மன்ற கூட்டங்களில்  நகர்மன்ற உறுப்பினர்களிடம் தீர்மானங்களில் கையெழுத்து பெறாமல் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவும் நகர்மன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை நகராட்சி நிர்வாகம் போட்டு கொள்கின்றதா என சந்தேகம் அடைந்து  தீர்மான பதிவேடுகளை காட்ட வேண்டுமென நகர்மன்ற ஆணையரிடம்  கேட்டபொழுது தீர்மான  பதிவேடுகளை நகர்மன்ற உறுப்பினர்களுக்கு காட்ட மறுத்து  ஆணையர் ஆண்டவர்  தனது அறைக்கு சென்று  அமர்ந்து கொண்டார்  தீர்மான பதிவேடுகளை  பார்க்காமல் வெளியில் செல்ல மாட்டோம் என கூறி  நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருவதாகவும்  கூறி  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டம் 

 சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையில் ஈடுபட்டு வரும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு பதில் அளிக்காமல்  ஆணையர் அலட்சியப்படுத்தி வருவதால்  தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com