நாட்டிலேயே பெரிய உயர்நீதிமன்றம்! திறந்து வைக்கும் குடியரசு தலைவர்!!

நாட்டிலேயே பெரிய உயர்நீதிமன்றம்! திறந்து வைக்கும் குடியரசு தலைவர்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். 

ராஞ்சியை அடுத்த துர்வாவில், 165 ஏக்கர் பரப்பளவில் உயர்நீதிமன்றத்தை அமைக்கும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. பணிக்கான காலக்கெடு, 30 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட காலதாமதத்திற்கு பின், கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. 

இந்த நிலையில், 550 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, இக்கட்டடத்தில் ஆயிரத்து 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வகையில், இரு அரங்குகள், மூன்று ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட நுாலகம் மற்றும் 540 வழக்கறிஞர்கள் அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர் நீதிமன்றம் நாட்டில் உள்ள மற்ற உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவற்றை விட பெரியதாகும். இந்நிலையில் நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்க உள்ளார். 

இதையும் படிக்க:'2,000 ரூபாய் நோட்டு அறிவிப்பு' சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்!