
சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் டென்னிஸ் மைதானத்தில், மாலைமுரசு அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான ஆண்கள் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது.
சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் டென்னிஸ் மைதானத்தில் ராமச்சந்திரா ஆதித்தனார் நினைவு கோப்பைகான ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பிரான்ஸ்,ஜப்பான், உக்ரைன்,ஸ்பெயின் உட்பட 9 சர்வதேச நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இன்று தொடங்கிய ஆண்கள் டென்னிஸ் போட்டி 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பையை மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தனார் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இன்றைய தினம் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒவ்வொரு அணிக்கும் இரண்டு போட்டிகள் வீதம் 16 போட்டிகள் நடைபெற்று அதில் 32 வீரர்கள் விளையாடினர். இன்று நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய வீரர்களுக்கு இடையேயான போட்டியில் 16 வீரர்கள் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினர். இதில் தாய்பே மற்றும் இந்தியா இடையேயான ஆட்டத்தில் இந்திய வீரர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புலி நடமாட்டம்... கோரிக்கை வைத்த மக்கள்!!