பொதுக்கழிப்பிட கட்டுமான பணிகளுக்கு பொதுக்குடிநீரை பயன்படுத்திய ஒப்பந்ததாரர்!

பொதுக்கழிப்பிட கட்டுமான பணிகளுக்கு பொதுக்குடிநீரை பயன்படுத்திய ஒப்பந்ததாரர்!
Published on
Updated on
1 min read

திருச்செந்தூரில் பொதுக்கழிப்பிடம் ஒன்றை கட்டுவதற்கு, அப்பகுதியில் உள்ள பொதுக்குடிநீர் குழாயிலிருந்து குடிநீரை திருடி பயன்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தெப்பக்குளம் அருகில்  நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 36 லட்சம் மதிப்பில் புதிய பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுவருகிறது. ஒப்பந்தம் அடிப்படையில் இதன் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில் இதன்  கட்டுமான பணிகளுக்கு அதன் அருகிலுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் இணைப்பிலிருந்து முறைகேடான முறையில் பைப் மூலம்  தண்ணீரை  திருடி பயன்படுத்தியுள்ளனர். 

ஏற்கனவே திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே அப்பகுதி பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  ஒப்பந்ததாரர் கட்டுமான பணிகளுக்காக குடிநீரை திருடி பயன்படுத்துவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com