கேஸ்ஸை திறந்து விட்டு சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்.... தப்பியோட்டம்!!!

கேஸ்ஸை திறந்து விட்டு சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்.... தப்பியோட்டம்!!!

குடும்ப தகாராறில் வீட்டில் இருந்த கேஸ்ஸை திறந்து விட்டு சிலிண்டரை வெடிக்க வைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள மருதகுளம் பகுதியை சேர்ந்த வள்ளி அவரது கணவர் இசக்கிபாண்டி. இத்தம்பதியினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்கடந்த 4 வருடங்களாக தூத்துக்குடி புதுகிராமம் சாலையில் 
ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் ராஜேந்திரன் அவரது மனைவி ராஜகுமாரி என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்பகுதியில் உள்ளசிறியவீட்டில் வாடகைக்குகுடியிருந்துவருகின்றனர்.

ராஜேந்திரன்கடந்தசிலதினங்களுக்குமுன்இறந்துள்ளார். ராஜகுமாரி மட்டும் முன்வீட்டில் வசித்துவந்துள்ளார்.  இந்நிலையில் இரவு திடீரென பின்வீட்டில் தீப்பற்றி எரிவதாக அருகில் இருந்தவர்கள் தெற்குகாவல்நிலையம் மற்றும் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளத்துள்ளனர்.  சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்ததால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீபரவாமல் பெரும்சேதம்தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தெற்குகாவல்நிலைய ஆய்வாளர் ராஜராம் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதனோடு தப்பியோடிய அவரது கணவர் இசக்கிபாண்டியை தேடிவருகின்றனர்.  போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் வள்ளி கணவரை பிரிந்து சில வருடங்களாக இந்தவீட்டில் இருந்து வந்ததாகவும் நேற்று தனது 3 ஆண்குழந்தைகளும் படிப்பு மற்றும் வேலைக்காக வெளியூர் சென்றதை அறிந்த கணவர் இசக்கிபாண்டி இரவு வீட்டிற்கு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டுஉரிமையாளர் ராஜகுமாரி வள்ளியிடம் உனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றும்படி கூறியுள்ளார்.    இசக்கிபாண்டி மறுப்பு தெரிவித்து மனைவியுடன் தொடர்ந்து சண்டை போடவே வள்ளி காவல்துறை கட்டுப்பாட்டு அறைஎண் 100க்கு போன் செய்து இதுகுறித்து தகவல் தெரிவித்துவிட்டு தெற்குகாவல்நிலையம்சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் தனியாக இருந்த இசக்கிபாண்டி, வீட்டுஉரிமையாளர் வீட்டைவிட்டு வெளியேற்றும்படி கூறியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்ப்படுத்தியதால் வீட்டில் இருந்த கேஸ்சிலிண்டரை திறந்துவிட்டு நெருப்பைபற்றவைத்துவிட்டு தீபற்றியவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.  இச்சம்பவம்அப்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்ப்படுத்தியுள்ளது.  தப்பி சென்ற இசக்கி பாண்டியனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:   மீன் ஏற்றி சென்ற வாகனம் விபத்து... தொடரும் விசாரணை!!!