சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி; 4 வருடங்கள் கடந்து தட்டிக்கேட்ட தம்பி!

சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி; 4 வருடங்கள் கடந்து தட்டிக்கேட்ட தம்பி!

காதல் திருமணம் செய்த அக்காவை படுகொலை செய்தவரை அப்பெண்ணின் தம்பி கொல்ல முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம்  ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் - வர்ஷினி பிரியா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் கனகராஜின் அண்ணன் வினோத் படுகொலை செய்தார். இவருடன் இந்த கொலைக் குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் கந்தவேல். இந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கந்தவேல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். X10 நாட்களில் மூன்று ஆணவக் கொலைகள்! - மின்னம்பலம்

ஆணவ கொலை சம்பவத்தில் கந்தவேலால் உயிரிழந்த வர்ஷினி பிரியாவிற்கு சச்சின் என்ற ஒரு தம்பி இருந்துள்ளார். இவர் கந்தவேல் இருக்கும் அதே அகுதியில் வசித்துவருபவர். காதலித்தவரை கரம் பிடித்தற்காக தனது அக்காவை ஆணவகொலை செய்த கந்தவேலை பழிவாங்க வேண்டும் என்று சச்சின் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே, கந்தவேல் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த சச்சின் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், வர்ஷினி பிரியாவை கொன்றதற்காக கந்தவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு, கைகலப்பாக முற்றி சச்சின் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தவேலை சரமாறியாக வெட்டத்தொடங்கினார்.

இதில் கந்தவேலை தலை மற்றும் கை போன்ற இடங்களில் வெட்டிவிட்டு சச்சின் உட்பட நாள்வரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கந்தவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சின் அவரது நண்பர்களான திலிப், விபின் பிரசாத் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அக்காவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கந்தவேலை வெட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பின்னர் நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதையும் படிக்க:வானத்தில் மிதக்கும் சுற்றுலா பயணிகள்; கேரள அரசின் புதிய முயற்சி!