கால்நடைகளை அட்சயபாத்திரம் எனப் புகழ்ந்த அமைச்சர்...!!

கால்நடைகளை அட்சயபாத்திரம் எனப் புகழ்ந்த அமைச்சர்...!!

ஆடு, மாடு, கோழிகளை நடமாடும் வங்கி, அட்சயபாத்திரம் என கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புகழ்ந்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஆளுநர் மீதான உரையின் காரணமாக சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் திட்டங்கள் அதன் மீதான விவாதங்கள் கேள்விக்கு பதில்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை தொழில் என்பது சிறு குறு விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்து வருகிறது எனவும் கால்நடை வளர்ப்பு என்பது கிராமத்தினுடைய பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

அந்த வகையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் 3 - 4 மாடுகளும் வைத்திருந்தால் அவர்களுடைய பொருளாதார நிலை காக்கப்படுகிறது எனவும் அதேபோல 10 - 15 ஆடு வளர்த்து வருகிறார்கள் என்றால் குடும்பத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் பணம் தரும் நடமாடும் வங்கியாக கால்நடைகள் விளங்குகின்றன எனவும் கூறினார்.

மேலும், கிராமத்தில் உள்ள தாய்மார்கள் 5 - 6 கோழிகளை வளர்க்கின்ற போது அது தினந்தோறும் அவர்களுக்கான செலவை சமாளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது எனவும் பேசினார்.

இதையும் படிக்க:    சிறு தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல்...!!