10 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட முதியவர்....!!!

10 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட முதியவர்....!!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(42).  இவர் பெயிண்டிங் கான்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த 2016 ஆண்டு தனது நண்பர் மூலம் கேகே நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி(60) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.  மேலும் பாலாஜி தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரை தெரியும் என கூறியதை நம்பி விஜயகுமார் தனது தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளளார்.

அதற்கு பாலாஜி தனக்கு வங்கி அதிகாரிகள் தெரியும் என்றும் லோன் வாங்க பணம் செலவாகும் என கூறியுள்ளார்.  இதற்கு ஒப்புதல் தெரிவித்து விஜயகுமார் கடந்த 2016 முதல் 2022 ஆண்டு வரை சிறுக சிறுக 10 லட்சம் ரூபாயை பாலாஜிக்கு கொடுத்துள்ளார்.  பணத்தை பெற்று கொண்ட பாலாஜி குறிப்பிட்டது போல் எந்த லோனும் வாங்கி தராமால் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்ட விஜயகுமார் இது குறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார். விஜயகுமார் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கமாறு ஆணையர் அலுவலகத்தில் இருந்து புகார் மனு ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதனையடுத்து ராமாபுரம் போலீஸார் விஜயகுமார் புகாரின் பேரில் விசாரணை நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பாலாஜி(60) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:  சமூக சேவைக்கான விருதை பெற்ற மேயர் பிரியா....!!!