மதுவுக்கு அடிமையாகி சிறுமியை தெருவில் தவிக்க விட்ட பெற்றோர்!

மதுவுக்கு அடிமையாகி சிறுமியை தெருவில் தவிக்க விட்ட பெற்றோர்!
Published on
Updated on
1 min read

மதுரையில் தாய் தந்தை இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, அவர்களின் சொந்த மகளையே தெருவில் தவிக்கவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பெற்றோர்கள் மது அருந்தி விட்டு துன்புறுத்துவதாக 9 வயது பெண் குழந்தை அவனியாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம்.

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம். இவர் தனது மனைவி பாண்டியம்மாள் மற்றும் 9-வயது பெண்குழந்தையுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். குழந்தை4-ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

களஞ்சியம் மாற்று அ வரது மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டால், அவர்களது மகளை குழந்தையென்றும் பாராமல், இரவு நேரத்தில் வெளியே துரத்தி விட்டுவிடுவார்களாம். இதனால் சிறுமி பல நேரங்களில் தெருவிலேயும், தோழி வீட்டிலும் தங்கியுள்ளாள். 

இது போல, நேற்றும், களஞ்சியம் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். வழக்கம் போல் சிறுமியை, வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். சிறுமியும் செய்வதறியாமல், வழக்கம் போல் வெளியில் தங்கியுள்ளாள்.

பின்னர் காலையில், அவனியாபுரம் காவல் நிலையத்தில், தஞ்சம் புகுந்துள்ளாள். பின்னர், அப்பகுதியை சேர்ந்த வக்கீல், சிறுமியை மீட்டு உண்ண உணவு, உடை மற்றும் கல்வியை வழங்குமாறு ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாவட்ட சமூக நலத் துறைக்கு உத்திரவிட்டார்.

அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா ஆகியோர் பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். கலெக்டர் சங்கீதா அந்த குழந்தையிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார். மேலும், இது குறித்து குழந்தைகள் நல குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

தங்களுக்கு குழந்தை இல்லை என மனமுடைந்து வாழும் மக்களுக்கு மத்தியில், அழகான குழந்தையை அன்புடன் வளர்ப்பதை விட்டுவிட்டு, பெற்றோர் மதுவுக்கு அடிமையாகி, குழந்தையை தெருவில் தவிக்க விடும் அளவிற்கு மக்கள் மனசாட்சியற்றவர்களாக மாறிவருவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com