
பஜ்ஜி சாப்பிட செல்வதற்காக ஆம்புலன்ஸில் சைரன் ஒலித்தப்படி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சென்சுரி மருத்துவமனையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெருக்கடிக்கிடையே சைரனை ஒலித்துக்கொண்டு வேகமாக வந்துள்ளது. இதனை கண்ட போலீசார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய ஆம்புலன்சில் நோயாளிகள் உள்ளார்களே என எண்ணி அவசர அவரமாக மற்ற வாகனங்களை நிறுத்தி சிக்னலை கிளியர் செய்து ஆம்புலன்சை அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்று அப்பகுதியில் உள்ள டீ கடையில் நிறுத்தப்பட்டது. இதனை கவனித்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்புலன்ஸில் சைரனை ஒலித்துக்கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டும் டீ மற்றும் குளிர்பானம் அருந்தி கொண்டுருந்தனர். உடனே அதனை வீடியோ பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.