கொட்டி தீர்த்த மழை... மகிழ்ச்சியில் மக்கள்...!!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்ததுடன் பல்வேறு பகுதிகளில் நூறு டிகிாி செல்சியசை தாண்டி வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் பொிதும் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திடீரென கோடை மழை வெளுத்து வாங்கியது. சென்னை பகுதிகளில் பகல் நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நள்ளிரவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னா் சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறாவளி காற்ற வீசியதில் சாலையோரம் இருந்த மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீா்த்தது.
இதன் காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கரடிச்சோலை அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூம்பாறை, மன்னமனூர், கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை கிராமத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையை பொது மக்கள் கையில் எடுத்து ஆனந்தமாக மகிழ்ந்தனர்.
இதையும் படிக்க: ஓபிஎஸ் வீட்டில் முதலமைச்சர் திடீர் விசிட்... கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!