நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் கெட்டிக்கார பூனை!

தென்கொரியாவில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீடு ஒன்றிற்குள் சென்று உணவருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் கெட்டிக்கார பூனை!
தென்கொரியாவில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீடு ஒன்றிற்குள் சென்று உணவருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வெளியான அந்த வீடியோவில், தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் வீட்டை நம்பர் லாக் பூட்டில் பூட்டி விட்டு வெளியே செல்கிறார். இதையடுத்து அவர் வீட்டிற்கு பூனை ஒன்று வந்து உணவை சப்பிட்டுவிட்டு செல்கிறது. அதாவது வீட்டின் உரிமையாளர் போட்ட நம்பர் லாக்கை தனது காலால் அழுத்தி வீட்டை திறந்து உள்ளே செல்கிறது. பின்னர் வீட்டில் இருக்கும் உணவுகளை தேடி சாப்பிடுகிறது. இந்த நிகழ்வு குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், பல முறை  பூனையை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அந்த பூனை தங்களது தெருவில் சுற்றித்திரிவதாக தெரிவித்தார்.
எனினும் வீட்டின் லாக்கை திறந்து செல்வதுதான் மிகவும் ஆச்சர்யமாகவுள்ளது என்ற அவர், தான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்து பார்த்தால் அந்த பூனை எதாவது ஒரு உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் என்றார்.  பூனையின் தொந்தரவு தாங்காமல் டோர் லாக் கருவியில் லேமினேஷன் பேப்பரை போட்டபோது,  அந்த பூனை அதையும் கிழித்துவிட்டதாக நகைப்புடன் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=SqIBCdGNj0g&feature=emb_logo