தாய் தந்தையரை அடித்து கொன்ற மகன்... நடந்தது என்ன?!

தாய் தந்தையரை அடித்து கொன்ற மகன்... நடந்தது என்ன?!
Published on
Updated on
1 min read

ஊத்துக்குளி அருகே மகனே தாய் மற்றும் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்தில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணமூர்த்தி ரேணுகாதேவி தம்பதியினர்.  இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.  கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியிடம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை கிணற்றுக்குள் இருந்து கார்த்தி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு ஜே சி பி பேட்டரிகளை திருட முயற்சித்ததாகவும் அதனை தடுக்க முற்பட்டபோது தன்னை கிணற்றுக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு உடனடியாக கிருஷ்ணமூர்த்தி ரேணுகாதேவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும் கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் இருந்தார்.  உடனடியாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்தி இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த கிருஷ்ணமூர்த்தி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அவரே இரும்பு குழாயால் தனது தாய் மற்றும் தந்தையை அடித்ததாகவும் இதில் தாய் உயிரிழந்த நிலையில் தந்தை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தந்தையும்  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  கார்த்திக் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com