போராட்டத்தில் இறங்கிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள்...

நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக (டெம்பரவரி) துப்புரவு பணியாளர்களின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் இறங்கிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள்...

கள்ளக்குறிச்சி | உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணியாற்றக் கூடிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜெயராமன்,
செயலாளர் பழனியம்மாள் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | பெற்ற குழந்தைகளைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியர்...

போராட்டத்தின் கோரிக்கைகள்

  • மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள், ஊராட்சி நிறுவனங்கள் அரசு அலுவலக பணிகளை அவுட் சோஸ்ஸிங், கான்ட்ராட் விடும் அரசாணைகள் 115 139 152 ஐ செய்க.
  • புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்து
  • 2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்து அனைவருக்கும் பென்சன் வழங்கு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புக
  • நகராட்சி பேரூராட்சிகளில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 25000 வழங்குக
  • தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனோ ஊக்கத்தொகையை ரூபாய் 15 ஆயிரத்தை உடனடியாக வழங்குக
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் மகளிர், ஆண்கள் சுய உதவிக்குழு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குக
  • நகராட்சி பேரூராட்சி ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித்தரவும் பொழுது உள்ள குடியிருப்புகளை பராமரித்து புதுப்பித்தல் செய்து தர வேண்டும்.
  • நகராட்சி பேரூராட்சி ஊழியருக்கு வேலைக்கு சம ஊதியம் வழங்குக.
  • அனைத்து ஊழியிருக்கும் அகவிலைப்படி உயர்வு சரண்டர் பிஎஃப் வட்டித்தொகை வழங்கிடுக.
  • கார்ப்பரேட் திருமுதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் நலசட்ட தொகுப்பு நான்கையும் கைவிட்டு பழைய 44 சட்டத்தை அமல்படுத்து

என பல்வேறு கூறுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | டெல்லி ராஜ்கட்டில் 144 தடை உத்தரவை மீறி காங்கிரஸார் போராட்டம்...!