மோடி அரசில் மக்களின் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பே கிடையாது !!!! மார்க்ஸ் நினைவுநாளில்....

மோடி அரசில்  மக்களின் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பே கிடையாது !!!! மார்க்ஸ் நினைவுநாளில்....
Published on
Updated on
1 min read

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காரல் மார்க்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 மார்க்ஸ் தத்துவத்தை தமிழக ஆளுநர் தவறாக பேசினார்

 மின்சாரம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது அதேபோல் தான் மார்க்ஸ் தத்துவம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது அப்படிப்பட்ட தத்துவம் குறித்து தான் தமிழக ஆளுநர் தவறாக பேசியதாகவும், இந்திய சமூகம் கேட்டது சீர்கேடு அடைந்ததற்கு மார்க்ஸ் கொள்கைதான் காரணம் என்று தவறான கருத்தை தெரிவித்தார்.

நாட்டில் இருந்து மூன்று எதிரிகளை அகற்றப்பட வேண்டும் - ஆளுநர்

அவர் பேசியது தெரியாமல் கூறவில்லை ஆர்எஸ்எஸ் கொள்கை இதுதான் மார்க்சியம் வெற்றி பெறக் கூடியது எனறும் இந்த நாட்டில் இருந்து மூன்று எதிரிகளை அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிச கொள்கைகள் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்றார். அந்த கொள்கையை தான் தமிழக ஆளுநர் தெரிவித்திருக்கிறார் .
மேலும், மார்க்ஸ் தத்துவத்தையும் கொள்கையையும் அழிப்பதற்கும் அதை பின்பற்றும் கம்யூனிஸ்ட் அளிக்க எந்த கொம்பனாலும் முடியாது என தெரிவித்தார். இந்தியாவும் இந்திய சமுதாயமும் ஒரு நாள் பொதுவுடமை சமுதாயமாக மாறும் என்றார். 

விவாதிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

 நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்தும் மக்களை பாதிக்கிற பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.  நாடாளுமன்றத்தை நம்பிக்கை இல்லாத மோடியின் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது இது குறித்து பேசும்போது மறுக்கப்படுகிறது.

மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் அவைகள் குறித்து சட்டம் இயற்றப்படுவதற்கு தான் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசாகவும், பாசிச கொள்கையின் மீது நம்பிக்கை உடைய அரசாக இருக்கிறது.  அதனால் தான் ஆன்லைன் ரம்மி, நீட் நுழைவுத் தேர்வு, அதானி கொள்ளையடித்த நிகழ்வுகளையும் விவாதிக்க மறுக்கிறார்கள் என கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com