"என் மண் என் மக்கள் யாத்திரைக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகின்றனர்"  திருநாவுக்கரசர் எம்.பி!!

"என் மண் என் மக்கள் யாத்திரைக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகின்றனர்"  திருநாவுக்கரசர் எம்.பி!!
Published on
Updated on
1 min read

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அண்ணாமலை தலைமையில் தற்போது நடந்து கொண்டிருப்பது பாதயாத்திரை அல்ல, அது ஒரு கார் யாத்திரை என விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "அண்ணாமலை தலைமையில் தற்போது நடந்து கொண்டிருப்பது பாதயாத்திரை அல்ல. அது ஒரு கார் யாத்திரை. ஒவ்வொரு தொகுதிகளையும், அந்த தொகுதி எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களையும் திட்டுகின்ற வேலையை தான் அண்ணாமலை செய்கிறார்" என விமர்சித்துள்ளார்.

மேலும், "இதனால் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது. இது ஒரு தோல்வி யாத்திரை. அண்ணாமலை அரசியல் கற்றுக் கொள்ளவில்லை இனியாவது அரசியல் கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நடந்து செல்லும் போது கூட்டம் கூடவில்லை ஓடுகின்ற கூட்டத்தையும் காசு கொடுத்து கூட்டி வருகின்றனர்" எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், அதிமுகவிலிருந்து பலத்த எதிர்ப்பு வந்தவுடன், அண்ணாமலை அதிமுக குறித்த விமர்சனங்களை சமீபத்தில் தவிர்த்து வருகிறார் என்றும் அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்றும் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com