மீரா விஜய் ஆண்டனியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கான திரைப் பிரபலங்கள்!!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று  கீழ்ப்பாக்கம் கல்லறையில் நல்லடக்கம் செய்யபப்டுகிறது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். உடற்கூறாய்வுக்கு பின், ஆழ்வார்பேட்டையில் உள்ள விஜய் ஆண்டனி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

இந்த செய்தி அறிந்த திரை பிரபலங்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் நேரில் வந்து மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இன்று காலை 8 மணி வரை மீராவின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுக்கிறது.  பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் மீராவின் உடல் வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான திரைப்பிரபலங்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக மீராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினர், உறவினர்கள், பள்ளி நிர்வாகி உள்பட பல்வேறு தரப்பிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. மேலும் தடயவியல் நிபுணர்களை கொண்டு இல்லத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க || விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நெறிமுறைகள்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!