பிரதமர் பதவியில் இருந்து மோடியை இறக்கும் வரையில்......

பிரதமர் பதவியில் இருந்து மோடியை இறக்கும் வரையில்......
Published on
Updated on
1 min read

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள அழகு முத்துக்கோன் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கூறியதாவது...

"இந்தியாவில் ஜனநாயக படுகொலை செய்யும் மோடி ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி அரசு தொடர்ந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறது. அதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் சிதைத்து வருகிறது. இதை கண்டித்து தான் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் அவர், "பிரதமர் பதவியில் இருந்து மோடியை இறக்கும் வரையில் காங்கிரஸ் கட்சியினரின் இந்தப் போராட்டம் தொடரும்' என்றும், மோடி ஆட்சி போதுமென்று மக்களும் நினைத்து விட்டார்கள் நாளை தேர்தல் வைத்தால் கூட மோடியும் பாஜகவும் படுதோல்வியை சந்திப்பார்கள்" என்றார்.

தொடர்ந்து, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு ஆருத்ரா கோல்டன் நிறுத்தி நிறுவன மோசடிக்கு அண்ணாமலை முதலில் பதில் சொல்லட்டும் என்று பதிலளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com