குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்..! கர்ப்பிணி மருமகள் மீது தீ வைத்த மாமனார்...!

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்..! கர்ப்பிணி மருமகள் மீது தீ வைத்த மாமனார்...!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் பிரகாஷ் மற்றும் அபிராமி  தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். அபிராமி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையை கண்டித்துள்ளார். இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி மற்றும் மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை திட்டியதுடன் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அபிராமி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட தகராறில் அபிராமியை மாமனார் கலியமூர்த்தி செருப்பால் அடித்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக அபிராமி தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையிலிருந்தவாறே வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் மீன்சுருட்டி போலீசார் அபிராமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்   பெண்ணின் மாமனார் கலியமூர்த்தியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : 2011க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு...தெளிவுபடுத்திய நீதிமன்றம்!