அடுத்தடுத்து மாற்றம்...எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

அடுத்தடுத்து மாற்றம்...எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாகியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். ட்விட்டரை வாங்கியது முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்வது உள்பட பல்வேறு அதிரடி மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

இதையும் படிக்க : குருவி போய் நாய் வந்துச்சு...இப்போ நாய் போய் குருவி வந்தாச்சு...!அடுத்து என்னவோ...

இந்நிலையில், எலான் மஸ்க் டிவிட்டரில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ-வை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் தயாரிப்பு, மென்பொருள், சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ-வாக தனது பங்களிப்பு இருக்கும் எனவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.