ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையா ? கட்சியினர் சாலை மறியல்

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையா ?  கட்சியினர் சாலை மறியல்
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அதில் மோடி என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  பாஜ எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தது

இந்த வழக்கில் சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா முன்னிலையில் இருதரப்பின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிந்தது. இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தது. மேலும்  ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

இதனை கண்டித்து காங்கிரஸ் கமிட்டியின் மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே ஊர்வலமாக வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு சிறை தண்டனை அறிவித்துள்ள மத்திய அரசை கண்டிக்கிறோம் என கோசங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com