அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ்...!

அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ்...!
Published on
Updated on
1 min read

திமுகவினரின் சொத்து குறித்தான விவரங்களை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த வாரம் 14 ஆம் தேதி திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் உள்பட பலரின் சொத்து விவரங்கள் குறித்தான தகவல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது. அத்துடன் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நொட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார். அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகையாக 500 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தகுந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுகவினரின் சொத்து குறித்தான விவரங்களை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில்  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்து குறித்தான தகவல்களில் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே, 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com