வேளச்சேரி பாதாள சாக்கடை திட்டம்... அமைச்சர் கே.என்.நேரு பதில்!!!

வேளச்சேரி பாதாள சாக்கடை திட்டம்... அமைச்சர் கே.என்.நேரு பதில்!!!

வேளச்சேரி மயிலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செப்டம்பர் 30க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி - விடை நேரத்தில் சோளிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை வேளச்சேரி மயிலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை வேளச்சேரி மயிலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்ற வருகிறது எனவும் இந்த பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு செப்டம்பர் 30க்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதியில் பள்ளிக்கரனை, வேளச்சேரியில் புதிதாக பிரிக்கப்பட்ட  ஒக்கியம்பாக்கம் உள்ளிட்ட 7 பகுதியில் பாதாள சாக்கடைத்திட்டம் விரைந்து பணிகள் முடிக்க வேண்டி கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் கே. என்.நேரு, புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய தொகுதி, அதில் 7.31 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக உள்ளது எனவும் சாக்கடை திட்டத்திற்கான பணிகள் 10 முறை ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டது எனவும் தெரிவித்த அவர் 39. 03 கோடி புதிய ஒப்பந்தம் 4.9.2020ல் போடப்பட்டது எனவும் இந்தாண்டு இறுதிக்குள் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  அதிமுகவுடன் அண்ணாமலை விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போல.... ஜெயக்குமார்!!