வேங்கை வயல் விவகாரம் ...! 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் ...!

வேங்கை வயல் விவகாரம் ...!  2 மாதத்தில் அறிக்கை தாக்கல் ...!
Published on
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில்,  ஒரு நபர் ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்கியது. முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யவராயனார், வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று மனிதக்கழிவுகள் கலந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும்,  புதிதாக அந்த பகுதி மக்களுக்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்ததா பாண்டே, சிபிசிஐடி, டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட 18 துறை அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு இதுவரை வேங்கை வயல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணை எந்த அளவு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து விவரித்துக் கூறினார்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், 

இந்த சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்தனர் என்றும்,  அதன் பிறகு சிபிசிஐடி  போலீசார்  தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை  150 பேருக்கு மேல் விசாரணை செய்து சாட்சிகளை பதிவு செய்துள்ளனர் என்றும் என்றும், அவர்களிடம் வழக்கு நிலை குறித்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 

மேலும் அவர், வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு மாத காலத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் எனது அறிக்கையில் தாக்கல் செய்வேன் என்றும், ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும், அவர்களுடைய விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள்  முடிக்க வேண்டும் என்று கூற முடியாது அவ்வாறு கூறினால் உண்மையான குற்றவாளிகளை அவர்கள் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், இது ஒரு வித்தியாசமான வழக்கு என்பதால் அறிவியல் பூர்வமான சாட்சிகளை தான் அவர்கள் சேகரித்து வருகின்றனர் என்றும் கூறினார்.

அதோடு, இந்த வழக்கை பொறுத்தவரையில் சென்னை உயர்நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள வரம்பிற்குள் மட்டுமே விசாரணை இருக்கும் எட்ன்றும், தான் நேரடியாக களத்திற்கு சென்று விசாரணை செய்ய முடியாது எனவும், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வதை தான்  கண்காணிக்கப் போவதாகவும் தெரிவித்தார். 

அதையடுத்தது பேசிய அவர்,  சி பி சி டி போலீஸ் சார் இரண்டு வகையாக தனது விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் ஒன்று குற்றவாளியை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தலாம் அல்லது குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் குற்றவாளிகள் அடையாளம் காண முடியவில்லை என்று தனது விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் , மேலும், நீதிமன்றத்தில் தான் அவர்கள் சமர்ப்பிக்க முடியும் இன்றும் கூறினார். மேலும், அடுத்த கட்ட விசாரணை இரண்டு அல்லது மூன்று வார காலத்திற்குள் மீண்டும் நடக்கும் என்றும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com